கோடை கால விடுமுறைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
பள்ளி கல்லூரி விடுமுறையை ஒட்டி சேலம் மதுரை வழியாக சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை;
கோடை விடுமுறை நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம்: கோடை விடுமுறை காலத்தில் பயணிகள் நெரிசலைக் குறைக்க, சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்க முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மும்பை - கன்னியாகுமரி வார சிறப்பு ரயில், மே 7 முதல் ஜூன் 26 வரை புதன்தோறும் அதிகாலை 12:30 மணிக்குப் புறப்பட்டு, மந்திராலயம் சாலை, தர்மாவரம், பங்காருப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியே சென்று, வியாழன் மதியம் 1:15 மணிக்கு கன்னியாகுமரியை அடையும். இந்த ரயில் வியாழன் அதிகாலை 4:10 மணிக்கு சேலம், 5:18 மணிக்கு நாமக்கல் நிலையங்களுக்கு வந்து செல்லும். திரும்பும் வழியில், மே 8 முதல் ஜூன் 26 வரை, வியாழன் மதியம் 3:30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி, சனிக்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு மும்பையை அடையும் வகையில் இயக்கப்படும். இந்த ரயில் வியாழன் இரவு 11:42 மணிக்கு நாமக்கல், 1:00 மணிக்கு சேலம் வழியாக செல்லும். அதேநேரம், கரூர் - திருச்சி இடையே பாலப்பணிகள் காரணமாக சில ரயில்களின் இயக்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 24, 26, 29 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - சேலம் ரயில் மாயனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்பதுடன், அதேபோல் அன்றைய தினங்களில் பாலக்காடு - திருச்சி ரயிலும் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.