சேலத்தில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள்
சித்திரை பௌர்ணமி மற்றும் முஹுர்த்த நாள் என்பதால் சேலத்தில் இருந்து மே 9 முதல் 13 வரை 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.;
சேலத்தில் சித்திரை பவுர்ணமி சிறப்பு பஸ்கள் இயக்கம் – நாளை முதல் தொடக்கம்
சித்திரை பவுர்ணமி மற்றும் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, மே 9ஆம் தேதி (நாளை) முதல் 13ஆம் தேதி வரை சேலம் கோட்டத்தில் 500 சிறப்பு அரசு போக்குவரத்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களிலிருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஜோசப்டயஸ் தெரிவித்துள்ளார். பயணிகள் [www.tnstc.in](http://www.tnstc.in) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
சித்திரை பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்காக மே 10 முதல் 12 வரை, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இக்காலப்பகுதியில், 10ம் தேதி காலை 6:00 மணி முதல் 12ம் தேதி மாலை 5:00 மணி வரை, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பஸ் வீதம் முன்பதிவு வசதியுடன் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் நெரிசல் மற்றும் குழப்பங்களைத் தவிர்த்து, பாதுகாப்பாக பயணம் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.