செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் தேர்வில் சாதனை,மாவட்டத்தில் முதல் இடம்

செந்தில் பப்ளிக் பள்ளி மாவட்டத்தில் 10ஆம் மற்றும் +2 தேர்வு முடிவுகளில் சிறந்த சாதனை;

Update: 2025-05-15 10:10 GMT

சேலம்: செந்தில் பப்ளிக் பள்ளி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கி, சாதனைப் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பில் மாணவர்கள் தரணேஷ் மற்றும் ஷீமா மெல்வினா இருவரும் 500ல் 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட முதலிடத்தைப் பிடித்தனர். மாணவர் நவீன் பிரபு 493 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றார். மாணவி ஷ்ரவந்தி புனித் மற்றும் மாணவர் கைலாசநாதன் ஆகியோர் 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தனர்.

அதேபோல், பிளஸ் 2 தேர்வில் மாணவி தியா தனசேகர் 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். நேத்ரா பாலாஜி மற்றும் பிரசன்னா ஆகியோர் 493 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், கிருஷ்ணா மூன்றாம் இடத்தையும் பிடித்து பெருமை சேர்த்தனர்.

இந்த சிறப்பான வெற்றிக்கு காரணமான மாணவர்களை, பள்ளியின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அதிகாரி பிரவீன் குமார், தலைமை நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மெர்சி ஜாய்ஸ் கமலம், கருணாம்பிகை, வைஜெயந்தி, சவுந்தர்ராஜன், வினோத்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News