1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு முடிவு

தேர்வுகள் அனைத்தும் அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்று வந்தது என பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்;

Update: 2025-04-17 10:10 GMT

உடுமலை வட்டாரத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு, இன்று (ஏப்ரல் 17) முழுமையாக நிறைவடைந்தது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வுகள், பள்ளிகளில் ஒழுங்காக நடத்தப்பட்டன.

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களை சேர்ந்த 186க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வந்தன. இப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, வரும் ஏப்ரல் 24ம் தேதி தேர்வுகள் முடிவடையும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் .

ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணி மற்றும் அட்டவணைச் சுமைகள் காரணமாக, ஏப்ரல் 30ம் தேதி வரை பணிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News