காவல்துறை ஓட்டுநர்களுக்கு கமிஷனர் அறிவுரை
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் போலீஸ் டிரைவர்களிடம் வாகனங்கள் குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கினார்;
போலீஸ் டிரைவர்களுக்கு கமிஷனர் அறிவுரை
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கமிஷனர் பிரவீன் குமார் அபினபு போலீஸ் வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் பின்னகாவலசேலம் மாநகர போலீஸ்சேலம் மாநகர போலீஸ்ருக்கு கமிஷனரின் பாதுகாப்பு அறிவுரைர், கமிஷனர் போலீஸ் டிரைவர்களிடம் முக்கிய அறிவுரைகளை வழங்கினார். வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம் என்றும், உரிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவ்வாறு செய்வதால் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார். மேலும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வைத் தொடர்ந்து குற்றத்தடுப்புக் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை கமிஷனர் பிரவீன் குமார் அபின்பு வழங்கினார்.