வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், 10 பவுன் நகை கொள்ளை
காங்கேயம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து 10 பவுன் நகையை கொள்ளைபடித்த கொள்ளையர்கள்;
காங்கேயம் அருகே வீட்டில் 10 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு
காங்கேயம் அருகே வாய்க்கால்மேடு, அன்னை சந்தியா நகரை சேர்ந்த முகமது (65), ஸ்டேசனரி கடைகளுக்கு பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். சமீபத்தில், மனைவியுடன் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நேரத்தில், அவரது வீட்டின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் கவனித்து போலீசாருக்கு தகவல் வழங்கினர். தகவலறிந்த முகமது மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர். வீட்டினுள் நுழைந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் நகையும் ரூ.5,000 பணமும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.