விண்ணப்பிக்க தயாரா? – TNPL கல்வி பயிற்சி வாய்ப்பு
புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தின் உதவியுடன், காகிதக்கூழ் பிரிவில் படிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது;
விண்ணப்பிக்க தயாரா? – TNPL கல்வி பயிற்சி வாய்ப்பு
கரூர் மாவட்டம் புகழூரில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.) தனது சமூக நலப் பணித் திட்டத்தின் கீழ், காகிதக்கூழ் பிரிவில் தொழில்நுட்பக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்காக சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், திருச்சிராப்பள்ளி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக்கூழ் பிரிவில் கல்வி பயில, அனைத்து கட்டணங்களும் நிறுவனம் சார்பில் முழுமையாக செலுத்தப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர்கள், புகழூர் நகராட்சி மற்றும் அதன் சுற்றியுள்ள பு.தோட்டக்குறிச்சி, ந.புகழூர், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும், பொதுத்தேர்வில் முதன்முறையாக தேர்ச்சி பெற்று, அறிவியல் மற்றும் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அடிப்படைத் தகுதிகள் அடிப்படையில், மொத்தம் 5 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த பயிற்சி வாய்ப்புக்கு விருப்பமுள்ளவர்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரத்தில் ஜூன் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஊரக மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் முன்னேற முக்கிய வாய்ப்பாக இருக்கின்றது.