புதிய தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் அரசு உதவி

புதிய தொழில் திட்டத்தில் மகளிர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்;

Update: 2025-04-30 05:40 GMT

புதிய தொழில் முனைவோர்களுக்கான ‘நீட்ஸ்’ திட்டம் – முதலீட்டு மானியத்துடன் அரசு உதவி

முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்குவித்து, சிறு மற்றும் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS)” என்பதைக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம், தொழில் துவங்க விரும்பும் நபர்களுக்கு, திட்ட மதிப்பின் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்:

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள்

ஐ.டி.ஐ., அல்லது இளங்கலை பட்டதாரிகள்

வயது 21 முதல் 55 வரை உள்ளவர்கள்

மகளிர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன்பின் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, கீழ்க்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்:

பொது மேலாளர்,

மாவட்ட தொழில் மையம்,

ஈரோடு - 638 001.

Tags:    

Similar News