பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பின் 5 மாணவிகள் மாயம்

5 பள்ளி மாணவிகள் மாயமானதை தொடர்ந்து போலீசார் மொபைல் டிராக் மூலம் திருச்சியில் கண்டுபிடித்தனர்;

Update: 2025-04-16 09:50 GMT

பவானி: ஈரோடு மாவட்டம் சித்தோட்டை மற்றும் பவானி பகுதிகளுக்கேச் சேர்ந்த ஐந்து சிறுமிகள், பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தபின், அவர்கள் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பவில்லை.

இவர்கள் அனைவரும், ஒன்றாக மாயமானதாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு 9:00 மணியளவில், அவர்களது பெற்றோர் பயந்த நிலையில்  மாணவிகள் வீடு திரும்பவில்லை என்று  பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் காணவில்லை. இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர் பவானி போலீசில் புகார் செய்தனர்.

மாணவிகள் கொண்டு சென்ற மொபைல் எண்களை அடிப்படையாகக் கொண்டு டிராக் செய்ததில், அவர்கள் திருச்சியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

Tags:    

Similar News