மீண்டும் மாயமான 17 வயது மாணவி

சமீபத்தில் மீண்டும் மாணவி வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனதை தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்;

Update: 2025-04-15 10:20 GMT

ஈரோடு கீழ்திண்டல் பகுதியில் உள்ள முத்து நிலையத்தைச் சேர்ந்த டெய்லராக பணியாற்றும் செல்வத்தின் மகள் இதயா (வயது 17), பிளஸ் 2 முடித்த பின்னர் வீட்டில் தங்கி இருந்தார். இதயா, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்  வீட்டை  விட்டு வெளியேறி மாயமானார். அப்போது பெற்றோர் அளித்த புகாரின் பேரில்  போலீசார் நடவடிக்கை எடுத்து, மாணவியை கண்டுபிடித்து மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் இதயா வீட்டை  விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக மீண்டும் தந்தை செல்வம், ஈரோடு தாலுகா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News