பார் உரிமையாளரிடமிருந்து பணம் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது

கரூரில் டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமையாளரிடம், கத்தி காட்டி பணம் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-04-10 05:50 GMT

கரூர்: பார் உரிமையாளரிடமிருந்து பணம் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே டாஸ்மாக் மதுபான கடை பார் உரிமையாளரிடம், கத்தி காட்டி பணம் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

க.பரமத்தி பூலாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த பால்ராஜ் (38), ஒரு டாஸ்மாக் பார் உரிமையாளர். கடந்த 8ஆம் தேதி, பால்ராஜ் க.பரமத்தி அருகே துலுக்காம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கடவூர் பகுதியை சேர்ந்த தங்கரத்தினம் (26) மற்றும் ஜெயசூர்யா (20) என்ற இரண்டு வாலிபர்கள், டூவீலர் மூலம் வந்து, பால்ராஜிடம் கத்தி காட்டி மிரட்டி 4,000 ரூபாய் பறித்து தப்பிசென்றனர்.

இந்த சம்பவத்துக்குப் பின்னர், பால்ராஜ் போலீசில் புகார் அளித்தார். அதன் மூலம், க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு, தங்கரத்தினம் மற்றும் ஜெயசூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News