மொபட்டை திருடியவர் கைது
ரயில்வெ ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்;
மொபட் திருடியவருக்கு 'காப்பு
சேலம்: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த அயுப்கான் (29), தனது மாமாவை சென்னைக்கு அனுப்புவதற்காக, கடந்த 20-ம் தேதி, 'டியோ' மொபட்டில் சேலம் டவுன் ரயில்வே நிலையத்திற்கு வந்தார். அவர் மொபட்டை நிலையத்தின் முன்புறம் நிறுத்திவிட்டு, மாமாவை அனுப்பிவிட்டுத் திரும்பியபோது, மொபட்டை காணவில்லை.
அயுப்கானின் புகாரின் அடிப்படையில், சேலம் டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெரமனூர், பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜகணபதி (42) என்பவர் மொபட்டைத் திருடியது தெரியவந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த காவல்துறையினர், திருடப்பட்ட மொபட்டையும் மீட்டனர்.