மாமியார் நகைகளை அடகு வைத்த மருமகள்
மாமியாரின் நகைகளை திருடி அடகுவைத்த மருமகளை போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்டார்;
மாமியார் நகைகளை திருடி அடகு வைத்த மருமகள் கைது
சேலம் கிச்சிப்பாளையம் அம்மையப்பன் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி யுவராணி ஆகியோருக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மணிகண்டனின் 62 வயதான தாயார் பாக்கியமும் இவர்களுடன் ஒன்றாக வசித்து வந்தார். கடந்த 4 முதல் 10 நாட்களுக்கு இடையில் பாக்கியத்தின் தோடு, மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட 8 பவுன் நகைகள் காணாமல் போனதாக பாக்கியம் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மாமியாரின் நகைகளை மருமகள் யுவராணியே ஒவ்வொன்றாக திருடி அடகு வைத்தது தெரியவந்தது. போலீசார் நகைகளை மீட்டுடன் யுவராணியை கைது செய்தனர்.