கல்லூரி சென்ற மாணவி மாயம்-அந்தியூரில் பரபரப்பு

அரசு கல்லூரியில் BBA மூன்றாம் ஆண்டு படிக்கும் பெண் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற பின் வீடு திரும்பாதத்தால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update: 2025-05-07 05:30 GMT

கல்லூரி சென்ற மாணவி இரண்டாவது நாளாக மாயம்:

அந்தியூர்:  அந்தியூர் அருகே முனியப்பன்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகள் ருத்ரா (வயது 20), கோபி அரசு கல்லூரியில் BBA மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கடந்த முன்தினம் காலை வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்ற ருத்ரா, அன்று மாலை வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் மற்றும் கல்லூரித் தோழிகள் மூலம் தகவல் சேகரிக்க முயன்றபோதும், அவரிடம் தொடர்பு கிடைக்கவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தடமும் கிட்டாத நிலையில், மாணவியின் மாமா துரைசாமி (41), அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி, போலீசார் மாணவியின் மாயமான நிகழ்வை முறையாக பதிவு செய்து, காணாமல் போனவராக பதிவு செய்து தீவிர விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ருத்ரா குறித்து தகவல் தெரிந்தவர்களிடம் போலீசார் தகவல் பகிருமாறு கேட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News