தனியார் பார் திறப்புக்கு மக்கள் எதிர்ப்பு

சட்டம் மீறி புதிய பார் அமைக்க கூடாது, உடையாப்பட்டியில் மக்கள் தர்ணா;

Update: 2025-04-16 10:20 GMT

தனியார் பாருக்கு எதிர்ப்பு

சேலம் உடையாப்பட்டி மக்கள் அஸ்தம்பட்டி மைய தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். உடையாப்பட்டி மூன்று சாலை சந்திப்பில் ஏற்கனவே அரசு அனுமதியுடன் ஒரு பார் இயங்கி வருகிறது. அதிலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் புதிதாக தனியார் மதுபானக் கடை (பார்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டினர். இவ்வாறு அருகருகே மதுபானக் கடைகள் அமைப்பதால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த பிரச்சனை குறித்து தாசில்தார் பார்த்தசாரதி பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சனையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும், இது தொடர்பாக கலால் துறை அதிகாரியிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News