வெள்ளி ரதத்தில் மகாவீரர் ஜெயந்தி விழா
ஆன்மிக நிகழ்வான மகாவீர் ஜெயந்தி யாத்திரையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் உற்சாகமாக கலந்துகொண்டனர்;
மகாவீர் ஜெயந்திரத யாத்திரை
சேலத்தில் ஜெயின் சமுதாயத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வான மகாவீர் ஜெயந்தி, பகவான் மகாவீரரின் 2,624வது பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஆதிநாத் ஜெயின் கோவிலில் கடந்த நாளில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, உலக அமைதி மற்றும் அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்கும் மகாவீரரின் பண்புகளை வலியுறுத்தும் வகையில், கோவிலிலிருந்து விமர்சையாக ஒரு ஊர்வலம் நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய அம்சமாக, வெள்ளி ரதத்தில் பகவான் மகாவீரரின் சிலை எழுந்தருள, ஊர்வலம் கோவிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக நகரமுழுவதும் பயணித்தது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உற்சாகமாக கலந்துகொண்டு, சமூக விழிப்புணர்வை தூண்டும் வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை கையில் ஏந்தி நடந்தனர். இறுதியாக, ஊர்வலம் செவ்வாய்ப்பேட்டையில் அமைந்துள்ள ஜெயின் மருத்துவமனை வரை சென்று, அங்கு அமைதியுடன் நிறைவடைந்தது.