ஒரு எலுமிச்சம் பழத்துக்காக ரூ.25,000 செலுத்திய பக்தர்
சித்திரை கனி ஏலத்தில் ஒரே ஒரு எலுமிச்சம்பழம் ஏலத்திற்கு வைக்கப்பட்டு இறுதியாக ரூ.25,000க்கு ஏலாம் முடிவடைந்தது;
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமியை தரிசித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த இரவு கோவில் வளாகத்தில் சித்திரை கனி ஏலம் நடைபெற்றது. இதில், சுவாமியின் பூஜையில் பயன்படுத்தப்பட்ட ஒரே ஒரு எலுமிச்சம்பழம் ஏலத்திற்கு வைக்கப்பட்டது. பக்தர்கள் இதற்காக போட்டியிட்டு ஏலம் கூறினர்.
இவ்வேலையில், கந்தசாமிபாளையத்தைச் சேர்ந்த ஒருவரே இறுதியாக வெற்றி பெற்றார். அவர் அந்த எலுமிச்சம் பழத்தைக் ரூ.25,000க்கு ஏலத்தை முடித்தார். பக்தியின் பேரிழைப்பு என பக்தர்கள் இதனை வர்ணித்தனர்.