வீடு செல்வதா? பள்ளி செல்வதா? கோபத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2024-25 கல்வியாண்டுக்கான முன் தணிக்கை இன்று முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆரம்பமாகியுள்ளது.;
கோடை விடுமுறையிலும் பள்ளியில் பணிகள் – ஆசிரியர்கள் அதிருப்தி குரல்
ஈரோடு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2024-25 கல்வியாண்டுக்கான முன் தணிக்கை இன்று முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆரம்பமாகியுள்ளது. இதில் தீர்மான ஏடு, வவுச்சர், கேஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை குழுக்கள் பல்வேறு பகுதிகளில் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, எந்தத் தேதியிலும், எந்த பள்ளிக்குடும் திடீரென வரலாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தணிக்கை நடைபெறும் முக்கிய தேதிகள்:
மே 8 – பவானி, ஈரோடு, பவானிசாகர், சத்தியமங்கலம்
மே 9 – சென்னிமலை, பெருந்துறை
மே 12 – கோபி, டி.என்.பாளையம்
மே 13-16 – நம்பியூர், தாளவாடி, கொடுமுடி, மொடக்குறிச்சி
இந்த தணிக்கைகள் மே 20ஆம் தேதி வரை நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர்கள் தரப்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூறுகையில்:
மே மாத விடுமுறையில் குடும்பத்துடன் சிறிது நேரம் கழிக்க விரும்புகிறோம். பள்ளி சேர்க்கை, புத்தக விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்காக மாத இறுதியில் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இப்போது தணிக்கை காரணமாக மீதமுள்ள சில நாட்களும் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்துடன் ஓய்வெடுக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.