கோகுலம் செவிலியர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
செவிலிய தலைமைத்துவத்தில் புதிய காலத்தை திறக்கும் தேசிய கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது;
கோகுலம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவில் கருத்தரங்கம்
சேலம் கோகுலம் செவிலியர் கல்லூரியில் "செவிலிய தலைமைத்துவம் தலைவர்களை மேம்படுத்துதல் கவனிப்பை மாற்றுதல்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் செவிலியர் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுனர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கல்லூரியின் மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். தலைமை விருந்தினராக சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் கார்த்திகேயன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், கல்லூரி முதல்வர் தமிழரசி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். டாக்டர் ராஜேஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கருத்தரங்கு தொடர்பான விரிவான அறிக்கையை பேராசிரியர் சரவணன் வாசித்து அளித்தார். இந்த கருத்தரங்கில் 380க்கும் மேற்பட்ட செவிலியர்கள், செவிலியத்துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரியின் துணை முதல்வர் காமினி சார்லஸ் நன்றியுரை வழங்கினார்.