அனுமதியில்லாமல் வைத்த 19பேனர்களை அகற்றிய அதிகாரிகள்
ஆத்தூரில் பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.;
அனுமதியின்றி வைத்த 19 பேனர்கள் அகற்றம்
ஆத்தூரில் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கக் கூடாது என சமீபத்தில் நகராட்சி ஆணையர் சையதுமுஸ்தபாகமால் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று ஆத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
ஆத்தூர், ராணிப்பேட்டை, காமராஜர் சாலை, உடையார்பாளையம், உழவர் சந்தை, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 19 பேனர்களை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.
முன்னதாக, பொது இடங்களில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது