சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் பல கட்சியினரின் மரியாதை;
அம்பேத்கர் பிறந்த நாள் விழா: கட்சியினர் மாலை மரியாதை
சேலத்தில் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் எம்.பி. செல்வகணபதி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், சேலம் ஆர்.டி.ஓ. அபிநயா, தாசில்தார் பார்த்தசாரதி உள்பட பலர் உடனிருந்தனர்.
அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலர் பழனிசாமி மாலை அணிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, சரோஜா, அமைப்பு செயலர்கள் சிங்காரம், மாநகர், மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், பாலு, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்ரமணியன், சித்ரா, கொள்கைபரப்பு துணை செயலர் வெங்கடாசலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன், சக்திவேல் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
மாநகர், மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் பாஸ்கர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பா.ம.க. சார்பில் மாநகர், மாவட்ட கதிர்ராஜரத்தினம், த.வெ.க. சார்பில் மாவட்ட செயலர் பார்த்திபன், வி.சி.க. சார்பில் மாவட்ட செயலர் காஜாமைதீன், அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் அண்ணாதுரை, த.மா.கா. சார்பில் மாவட்ட தலைவர் உலகநம்பி, இ.கம்யூ. சார்பில் மாவட்ட செயலர் மோகன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டன.
சேலத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முகாம் அலுவலகத்தில் மாவட்ட செயலரும், எம்.பி.யுமான செல்வகணபதி, அம்பேத்கர், திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கட்சியினர் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.