அழகு கலையில் 30 நிமிடத்தில் உலக சாதனை

பாரம்பரிய முறையில், வெறும் 30 நிமிடங்களில் அழகுக் கலையில் அலங்காரம் செய்து சாதனை படைத்தனர் 100க்கும் மேற்பட்ட அழகு நிபுணர்கள்.;

Update: 2025-05-03 09:40 GMT

30 நிமிட அழகு கலைக் களத்தில் உலக சாதனை 

ஈரோடு அருகே உள்ள ஒத்தகுதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில், மயூரம் மேக் ஓவர் அகாடமி சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. பாரம்பரிய முறையில், வெறும் 30 நிமிடங்களில் அழகுக் கலையில் அலங்காரம் செய்து சாதனை படைத்தனர் 100க்கும் மேற்பட்ட அழகு நிபுணர்கள். அவர்கள் பெங்களூரு, சென்னை, கோவை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்தனர்.

இந்த மாபெரும் நிகழ்வு, World Wonders Book of Records என்ற உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிபுணர்களுக்கு, கல்லூரி செயலாளர் கருப்பணன் சான்றிதழ் வழங்கினார். விழாவில், மேக் ஓவர் அகாடமி தலைவர் கீர்த்தனாசாய்ராம், சாதனை புத்தக இயக்குநர் மகேஸ்வரி, கல்லூரி CEO கவுதம், முதல்வர் தங்கவேல் மற்றும் துணை முதல்வர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிறந்த ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவி முனைவர் சத்தியசுந்தரி செய்திருந்தார்.

Tags:    

Similar News