அரசு வேலைக்கு இலவச படிப்பு
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் பங்கேற்று, இலவசமாகப் பயிற்சி பெற தயாராகுங்கள் என அறிவித்துள்ளனர்;
ஈரோடு: சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் ஏற்பாட்டில் நாளை (ஏப்ரல் 23) தொடங்கவிருக்கின்றன.
இந்த பயிற்சி வகுப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அனுபவமுள்ள பயிற்றுநர்களால் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்பில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைஃபை, அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் கொண்ட நூலக வசதி, பொது அறிவு மாத இதழ்கள், இணையவழி தேர்வுகள், முழுமையான மாதிரி தேர்வுகள், மென்பாட குறிப்புகள் மற்றும் இணையதள இணைப்பு கொண்ட கணினி வசதிகள் உட்பட பல உபயோகமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.