மதுக்கடைக்கு எதிரான போராட்டம்
நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பாருக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் நூதன போராட்டத்தை நடத்தினர்;
தனியார் பார் அமைப்பதற்கு டி.ஒய்.எப்.ஐ., எதிர்ப்பு
சேலம் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் காலி மதுபாட்டில்களைக் கொண்ட நூதன போராட்டத்தை நடத்தியுள்ளனர். மாவட்ட செயலர் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
போராட்டத்தின்போது, அவர்கள் காலி மதுபாட்டில்களை கையில் ஏந்தியதுடன், சிலவற்றை கழுத்தில் மாலையாகவும் அணிந்து ஊர்வலமாக வந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து, பின்னர் மனு அளிக்க அனுமதித்தனர்.
இதுகுறித்து மாவட்டச் செயலர் பெரியசாமி கூறுகையில், "உடையாப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. நெடுஞ்சாலை ஓரம் செயல்படும் இந்த மதுக்கடையை அகற்றக் கோரி நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அதே பகுதியில் தனியார் பாருக்கு அனுமதி கொடுத்திருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது" என்றார்.நெடுஞ்சாலை ஓரம் செயல்படும்
இந்த நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகரத் தலைவர் கோபிராஜ், செயலர் விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.