புனித வெள்ளியில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
இந்த ஆன்மிக நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியோடு பங்கேற்று, இயேசுவின் தியாகத்தை ஆழமாய் அனுபவித்தனர்;
ஈரோட்டில் உள்ள புனித அமல அன்னை தேவாலயத்தில், புனித வெள்ளி நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் உருக்கத்தோடு நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த தியாகத்தை நினைவுகூறும் புனித வெள்ளி, கிறிஸ்தவர்களுக்குள் மிக முக்கியமான நாள். இது தவக்காலத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 5ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கிய தவக்காலம், 40 நாட்கள் ஆன்மிக ஆழ்மையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 13ல் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனிக்குப் பின்னர், இயேசுவின் கடைசி இரவு உணவைக் குறிக்கும் வழிபாடும், நற்கருணை பவனி மற்றும் நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனையும் நடந்தது.
புனித வெள்ளியன்று (ஏப்ரல் 18), காலை 6 மணி முதல் 11 மணி வரை மவுன ஆராதனையுடன் தொடங்கிய சிறப்பு வழிபாடுகள், இயேசுவின் சிலுவைப்பாதை நிகழ்வுகளை நினைவுகூரும் சிலுவைப்பாதை வழிபாட்டுடன் தொடர்ந்தன. மாலை, திருச்சிலுவை வழிபாடும் இடம்பெற்றது.
இந்த ஆன்மிக நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியோடு பங்கேற்று, இயேசுவின் தியாகத்தை ஆழமாய் அனுபவித்தனர்.