மதுபான கடையை எதிர்த்து பொது மக்கள் எதிர்ப்பு

ஈரோட்டில், புதிய மது விற்பனை கடை திறக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஈரோடு எஸ்.பி. சுஜாதாவிடம் நேற்று மனு அளித்தனர்;

Update: 2025-04-22 09:20 GMT

மதுக்கடைக்கு எதிராக மக்கள் எழுச்சி

ஈரோடு: ஈரோட்டுக்கு அருகிலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் புதிய மது விற்பனை கடை திறக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஈரோடு எஸ்.பி. சுஜாதாவிடம் நேற்று மனு அளித்தனர்.

அவர்கள் மனுவில் கூறியிருப்பதாவது: முந்தைய டாஸ்மாக் கடை, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சில மாதங்களுக்கு முன் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது அந்த பகுதிக்கருகே மதுபானம் மற்றும் தனியார் குளிர் மதுபானம் கடை என்ற பெயரில் புதிய கடை ஆரம்பிக்கப்படவிருக்கிறது. குடியிருப்பு, கோவில், குளம், வாய்க்கால் ஆகியவை சூழ்ந்துள்ள இந்த இடத்தில் மீண்டும் மதுக்கடை தொடங்க அனுமதிக்க கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News