பார்வையைத் தாண்டி வெற்றி – சேலத்தின் ‘கனா ஒலிம்பிக்ஸ் 2025
சேலம் விநாயகா மிஷனின் Allied Health Sciences கல்லூரியில் பார்வை குறைபாடு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ‘கனா ஒலிம்பிக்ஸ் 2025’ கலை-விளையாட்டு விழா;
பார்வையைத் தாண்டி வெற்றி – சேலத்தின் ‘கனா ஒலிம்பிக்ஸ் 2025’'கனா ஒலிம்பிக்ஸ் - 2025': விநாயகா மிஷனில் பார்வை குறைபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம்: பார்வை குறைபாடு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாகத்திலுள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் கண் ஒளியியல் பிரிவு சார்பில், 'கனா ஒலிம்பிக்ஸ் - 2025' என்ற விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி விருப்பமுடன் நடத்தப்பட்டது. மக்களுக்கு பார்வை குறைபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவிப்பதுமாக இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர் கணேசனின் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில், கல்லூரி டீன் செந்தில்குமார் மற்றும் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மகிழன் ஆகியோர் கலந்து கொண்டு, ஒலிம்பிக் சுடர் ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் உற்சாகமாக பங்கேற்றனர். அவர்களுக்காக வெளிப்புற மற்றும் உள்ளரங்க விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் நடனம், பாடல் போன்ற கலைப்போட்டிகளும் நடைபெற்றன. மாணவர்கள் தங்களின் தனித்திறனை முழுமையாக வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவின் சிறப்பான ஏற்பாட்டை கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளராக உள்ள பேராசிரியை தமிழ் சுடர் மற்றும் உதவி பேராசிரியர்களான சூர்யா, ஜெகதீஸ்வரி, லாவண்யா, அக் ஷயா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.