வி.ஏ.ஓ.வின் வீட்டில் கொள்ளை! – 34 பவுன் நகை, ₹50 ஆயிரம் பணம் மாயம்!

பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகை மற்றும் ₹50 ஆயிரம் மதிப்புள்ள பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.;

Update: 2025-05-14 04:30 GMT

திருச்சிக்கு சென்ற நிலையில் மர்மநபர்கள் வீட்டில் புகுந்து கொள்ளை :

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே கே.கே.நகரை சேர்ந்த திலீபன் (வயது 36), சின்னதாராபுரம் அணைப்பாளையத்தில் வட்டாட்சியர் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த மே 12ம் தேதி, குடும்பத்துடன் திருச்சிக்கு சென்ற அவர் வீடு பூட்டியே சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய திலீபன், முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகை மற்றும் ₹50 ஆயிரம் மதிப்புள்ள பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணை :

இதுபற்றி தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News