வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை திருட்டு

வெளியூர் சென்று பின் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை திருட்டிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது;

Update: 2025-05-08 09:10 GMT

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு– பெருந்துறையில் 1.5 பவுன் நகை மாயம் : 

பெருந்துறை அருகே சென்னிவலசை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (27), கடந்த 1ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்த ஒரு பவுன் தங்க செயினும், அரை பவுன் தங்க மோதிரமும் காணாமல் போனது தெரியவந்தது. தகவலறிந்த பெருந்துறை போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, திருட்டு வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News