ஈரோடு மாநகராட்சியில், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரங்கள் அகற்ற அறிவிப்பு
அனுமதியற்ற விளம்பரங்களை தாங்களே அகற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் மாநகராட்சியே தற்காலிக நடவடிக்கையெடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.;
ஈரோடு நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரங்கள் அகற்றம்
ஈரோடு மாநகராட்சியில், சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்த பதாகைகள், வாகன ஓட்டிகளுக்கு பார்வை தடை ஏற்படுத்தி விபத்து அபாயத்தை உருவாக்குகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. அனுமதியற்ற பதாகைகளை தாங்களே அகற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் மாநகராட்சியே தற்காலிக நடவடிக்கையெடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், நேற்று ஈரோடு காந்திஜி சாலை, ப.செ.பார்க் முதல் காளைமாடு சிலை வரை, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள், மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.