இன்று குடிநீர் விநியோகத் தடையால் மக்கள் அவதி

ஈரோடு மாநகராட்சியில், நீரேற்று நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-05-07 06:30 GMT

ஈரோடு மாநகராட்சியில் இன்று குடிநீர் விநியோகத் தடையால் மக்கள் அவதி :

ஈரோடு மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் வழங்கும் ஊராட்சிகோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில், பராமரிப்பு பணிகள் இன்று (மே 7) மேற்கொள்ளப்படுவதால், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி இதுகுறித்து தெரிவித்ததாவது, பராமரிப்பு பணிகள் முடிந்ததும், குடிநீர் விநியோகம் வழக்கை போல சீராக வழங்கப்படும் என கூறினார்.

மக்கள் தற்காலிகமாக தடையினை புரிந்து கொண்டு, நீர் சேமிப்பில் முனைப்புடன் ஈடுபட வேண்டுமெனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News