துபாயில் ஜனவரி மாதம் சர்வதேச தமிழ் தொழில் முனைவோர் மாநாடு
துபாயில் ஜனவரி மாதம் சர்வதேச தமிழ் தொழில் முனைவோர் மாநாடு நடைபெற உள்ளது.;
துபாயை மையமாக கொண்டு செயல்படும் தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் மாநாடு வரும் ஜனவரி மாதம் நடை பெறவுள்ளது.எக்ஸ்போ 2020 நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டின் மூலம் சுமார் 5,000 கோடிக்கு மேல் தமிழகத்தில் முதலீடு செய்ய தொழில் முனைவோர்களிடம் ஒப்பந்தம் கையெழுத்து ஆக உள்ளது.
இது தொடர்பான ஆலோனை கூட்டம் துபாய் நாட்டின் இந்திய துணை தூதரக அதிகாரி காளிமுத்துவுடன் நடைபெற்றது . இதில் டி.இ.பி.ஏ அமைப்பின் தலைவர் பால் பிரபாகரன், அமைப்பின் இந்திய ஆலோசகர் டாக்டர் ஷானவாஸ்கான், தமிழக அரசின் தொழில் துறை சிறப்பு அதிகாரி பால் அருண், டாம் பிசினஸ் தலைவர் ஷானவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் தொழில் முனைவோர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக தமிழக அரசு தொழில் துறை சிறப்பு அதிகாரிகள் பால் அருணுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் புதிய தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.