மகளிர் அரசு ஊழியருக்கு மகப்பேறு கால விடுப்பு அதிகரிப்பு
மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அதிகரிக்கப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.;
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்தது. அதில் , மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் எனவும்,
கடந்த 100 நாள்களில் தமிழக அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் கோயில்களுக்குச் சொந்தமான 626 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது எனவும்,
பழனி முருகன் கோயில் மூலம் சித்த மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.