ஜவுளி வியாபாரிகள் வேதனை
ஈரோட்டில், ஜவுளி வியாபாரிகள் பண்டிகை இல்லாததால் விற்பனை இல்லையென வேதனையடைந்தனர்;
மொத்த வியாபாரம் இல்லை என ஜவுளி வியாபாரிகள் கவலை
ஈரோடு: ஈரோடு மாநகரில் திங்கள் இரவு துவங்கி செவ்வாய் காலை வரை ஜவுளி சந்தை நடக்கிறது. குறிப்பாக ப.செ.பார்க், காந்திஜி சாலை, பழைய பூந்துறை சாலையில் கடை அமைக்கப்படுகிறது. வாரச்சந்தை வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து கனி (ஜவுளி) மார்க்கெட்டிலும் வியாபாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்த்து, வணிகர்கள் கடை வைத்துள்ளனர்.
இதுபற்றி கனி மார்க்கெட் வார சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது ரம்ஜான் பண்டிகை சமீபத்தில் தான் முடிந்துள்ளது. இதற்காக மொத்த வியாபாரிகள் ஜவுளி வாங்கி சென்றனர். தற்போது பண்டிகைகள் ஏதும் இல்லை.
அத்தியாவசிய தேவை, கோடை காலத்துக்கு ஏற்ற ஆடைகளை சில்லரை விலையில் மக்கள் வாங்கி செல்கின்றனர். மிக குறைந்த அளவில் சில்லரை வியாபாரம் மட்டுமே நடக்கிறது. பண்டிகைகள் வந்தால் ஜவுளி மொத்த வியாபாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கூறினார்