விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த பெண் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி
யு.பி.எஸ்.சி. தேர்வில் 617வது இடத்தைப் பிடித்து தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்தின் கனவுகளை நனவாக்கியுள்ளார்;
தாராபுரம் அருகே உள்ள குண்டடத்தை சேர்ந்த ஏழை விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த மோகன தீபிகா என்ற இளம் பெண், சமீபத்தில் வெளியான யு.பி.எஸ்.சி. தேர்வில் 617வது இடத்தைப் பிடித்து கவனம் ஈர்த்துள்ளார். வெறுவேடம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் – ராஜேஸ்வரி தம்பதியரின் மகளான தீபிகா (வயது 23), கடுமையான முயற்சியின் பலனாக நாட்டின் மிகப்பெரிய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்தின் கனவுகளை நனவாக்கியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், தீபிகா இந்த சாதனையை பெற்றுள்ளார். அவரது வெற்றிக்கு கிராம மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவரது தம்பி செல்வதீபக், தற்போது கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.