பவானி ஆற்று சுழலில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு
பவானி ஆற்றில், தூண்களுக்கு இடையிலுள்ள சுழல் போன்ற ஆழத்தில் சிக்கி வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.;
பவானி ஆற்று சுழலில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு :
பெருந்துறை அருகே குளத்துப்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள், மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி நேற்று மாலை டாட்டா ஏஸ் வாகனத்தில் 20க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்றனர். இவர்கள் தீர்த்தம் எடுக்க பவானி அருகே தளவாய்பேட்டை பகுதியில் உள்ள பவானி ஆற்றிற்கு வந்தனர்.
அங்கு, தர்மலிங்கம் (வயது 35) என்பவர் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, பாலம் கட்டும் பணிக்காக அமைக்கப்பட்ட தூண்களுக்கு இடையிலுள்ள சுழல் போன்ற ஆழத்தில் சிக்கினார். வெளியே வர முடியாமல் தவித்த அவர், இறுதியில் மூழ்கி உயிரிழந்தார்.
இதை கண்ட பொதுமக்கள் உடனே பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் வழங்கினர். விரைந்து வந்த வீரர்கள், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டனர்.
சடலம் பவானி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பவானி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.