மொடக்குறிச்சியில் நில ஆக்கிரமிப்பு

நில ஆக்கிரமிப்பு சிக்கலைத் தீர்க்க மாவட்ட ஆட்சியர் மற்றும் RTO அலுவலகத்தில், பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்;

Update: 2025-04-30 10:10 GMT

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி வடுகப்பட்டி 'ஆ' கிராமத்தில், 1989ஆம் ஆண்டு தமிழக அரசின் பூமிதான வாரியம் மூலம், சென்னி மகன் ஆறுமுகம் என்பவருக்கு நிலம் வழங்கப்பட்டது. அவரின் மகன் பெருமாள் தற்போது அதே இடத்தில் தந்தையுடன் வசித்து வருவதுடன், நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். மேலும், சம்பந்தப்பட்ட நிலத்திற்கு நில வரியும் செலுத்தப்பட்டு, அதற்கான சான்றுகளும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அந்த நிலத்தை அருகிலுள்ள மற்றொரு பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக பெருமாள் புகார் அளித்துள்ளார். இந்தச் சிக்கலைத் தீர்க்க மாவட்ட ஆட்சியர் மற்றும் RTO அலுவலகத்திலும், பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு RTO அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டத்தில், நேர்முக உதவியாளர் அமுதா தலைமையில்,  நபர்கள் நேரில் மனு வழங்கினர். சட்டை அணியாமல், மண் வெட்டியுடன் பங்கேற்ற பெருமாள், தன் நில உரிமையை வலியுறுத்தினார்.

இதேபோன்று, அந்தப் பகுதியில் பலருக்கும் இதேபோல் நில உரிமை சிக்கல்கள் இருக்கின்றன என்றும், நிலையான தீர்வு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News