மர்ம விலங்குகள் தாக்குதலால் கிராம மக்கள் அதிர்ச்சி

நேற்று முன்தினம் நள்ளிரவில், வெறிநாய் மற்றும் மர்ம விலங்குகள் பட்டிக்குள் புகுந்து தாக்கியதில் நான்கு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின;

Update: 2025-04-29 10:20 GMT

ஈரோடு மாவட்டத்தில் மர்ம விலங்குகள் தாக்குதலால் மக்கள் பதற்றம்

ஈரோடு அருகே கதிரம்பட்டி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர், பவளத்தாம்பாளையம் பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அத்துடன், பட்டி அமைத்து ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வெறிநாய் மற்றும் மர்ம விலங்குகள் பட்டிக்குள் புகுந்து தாக்கியுள்ளன. இதில் நான்கு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மேலும், ஒரு ஆடு உயிருக்கு போராடி வருகிறது. சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல, தாளவாடி அருகே முதியனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரபு தனது தோட்டத்தில் வளர்த்துவரும் மாடுகளை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு, ஒரு மாட்டை கழுத்தில் கடித்துள்ளது. வலியால் மாடு அலறி ஓடிய நிலையில், அதைக் கண்ட விவசாயிகள், மர்ம விலங்கு தப்பிச் சென்றதை கண்டுள்ளனர். சிறுத்தையா, புலியா என்பது உறுதி செய்யப்படாத நிலையில், அந்தப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.

Tags:    

Similar News