மாசடையும் பவானி – மக்கள் குரலுக்கு அரசு பதில் தருமா
பவானி நதிக்கு கண்காணிப்பு குழு அவசியம் தேவை என முன்னாள் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்;
பவானி நதியை காக்க குழு அமைக்க கோரிக்கை
பவானி நதி மாசுபாட்டை தடுக்கும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கம் உறுப்பினர்கள், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்துள்ளனர். குடிநீருக்கும் விவசாயத்துக்கும் முக்கிய ஆதாரமான பவானி நதி, தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்து, நீர் ஆரஞ்சு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தடுக்கும் வகையில், அனைத்து துறை மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.