குப்பை மேடு எரிந்து தீ விபத்து

குப்பையிலிருந்து திடீரென தீ உருவானதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்;

Update: 2025-04-15 10:30 GMT

ஈரோடு கனிராவுத்தர் குளம் பச்சப்பாளி மேடு அருகே உள்ள மாநகராட்சியின் சொந்த இடத்தில், காந்தி நகர் பகுதி மக்கள் நீண்ட காலமாக குப்பைகள் கொட்டிவந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தற்போது மலைபோல் குப்பைகள் தேங்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று மதியம் அந்த குப்பையிலிருந்து திடீரென தீ உருவாகி கரும்புகை எழுந்தது. தகவல் அறிந்ததும் ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீயின் தாக்கத்தால் அப்பகுதியை முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகள் பெரும் பீதியிலும் சிரமத்திலும் இருந்தன.  குடியிருப்புகள் வழியாக பரவிய புகை, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags:    

Similar News