தேங்காய் பருப்பு விலை அதிரடி உயர்வு

கோபியில் தேங்காய் பருப்பு விற்பனை உச்சத்தை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைத்தனர்;

Update: 2025-04-12 08:40 GMT

தே.பருப்பு மற்றும் நிலக்கடலை ஏலம்

கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில், 1 கிலோ பருப்பு 176 ரூபாயில் முதல் 188 ரூபாயில் வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 1,827 கிலோ தேங்காய் பருப்பு 2.82 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேபோல், நிலக்கடலை ஏலத்தில், 1 கிலோ 50 ரூபாயில் முதல் 65 ரூபாயில் வரை விற்பனை செய்யப்பட்டது, மொத்தம் 457 கிலோ நிலக்கடலை 26,000 ரூபாய்க்கு ஏலம் போனது. அவல்பூந்துறையில் 43 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலம் போனது, முதல் தரம் 150 முதல் 174 ரூபாய், இரண்டாம் தரம் 110.29 முதல் 148.09 ரூபாய்க்கு 773 கிலோ கொப்பரை 1.2 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

Tags:    

Similar News