காலிங்கராயன் வாய்க்காலில் சாக்கடை கலப்பால் மக்கள் அதிர்ச்சி
காலிங்கராயன் வாய்க்காலில் அதிக சாக்கடை நீர் கலப்பினால் குடிநீர், பயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது;
காலிங்கராயன் வாய்க்காலில் சாக்கடை நீர் கலப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் அருகே உள்ள K.A.S. நகர் பகுதியில், காலிங்கராயன் வாய்க்காலுக்கு அருகில் செல்லும் சாக்கடை, ஒரு இடத்தில் வாய்க்கால் நீரில் நேரடியாக சங்கமிக்கிறது. இதனால், நாளுக்கு நாள் வாய்க்கால் நீர் மாசடையத் தொடங்கியுள்ளது.
இப்பகுதியில் உள்ள மக்கள் இதுகுறித்து புகாரும் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக சாக்கடை நீர் கலக்கிறது. அதிகாரிகளுக்கு இது தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வாய்க்கால் நீர், பசுமை பாசனத்துக்கு மட்டுமல்ல, பல கிராமங்களில் குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சாக்கடை கலப்பு, நோய்களின் பரவலை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது என அவர்கள் வேதனையுடன் கூறினர்.
பயிர்கள், கால்நடைகள், மனிதர்கள் என அனைவரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், அலுவலர்கள் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்து, சாக்கடை நீர் கலப்பை முடக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.