சேலம் வழியாக டெல்லி செல்லும் சிறப்பு ரயில்
எர்ணாகுளம் - டெல்லி சிறப்பு ரயில் சேலம் வழியாக நாளை இயக்கம்;
சேலம் வழியே நாளை டெல்லிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
சேலம் ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எர்ணாகுளம் முதல் டெல்லி வரை சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, எர்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில் நாளை (ஏப்ரல் 16) மாலை 6:05 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு பல முக்கிய நகரங்கள் வழியாகச் செல்லும். இந்த ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, போபால், குவாலியர், மதுரா ஆகிய நகரங்களைக் கடந்து ஏப்ரல் 18 இரவு 8:35 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீன் (டெல்லி) சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் ஈரோடு ஜங்ஷனை ஏப்ரல் 17 அதிகாலை 12:45 மணிக்கும், சேலம் ஜங்ஷனை 1:47 மணிக்கும் அடையும். பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலில் மொத்தம் 20 ஸ்லீப்பர் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள ரயில்வே துறை அழைப்பு விடுத்துள்ளது. கோடை காலத்தில் அதிகரித்துள்ள பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.