மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,020 மெகாவாட் உற்பத்தி

மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது.;

Update: 2025-04-16 07:10 GMT

அனல் மின் நிலையங்களில் 1,020 மெகாவாட் உற்பத்தி

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் நான்கு அலகுகளில் ஒவ்வொன்றும் 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட்டும், புதிய அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் 600 மெகாவாட்டும் என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஆனால் வார விடுமுறை, தமிழ் புத்தாண்டு மற்றும் மழை காரணமாக ஆலைகள் மற்றும் விவசாய மின் தேவை குறைந்ததால், கடந்த 13ம் தேதி மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,230 மெகாவாட் மின்சார உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்ததால் நேற்று தமிழக மின் தேவை அதிகரித்ததை அடுத்து, புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட்டும், பழைய அனல் மின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது அலகுகளில் 420 மெகாவாட்டும் என மொத்தம் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News