24,000 ஏக்கரில் நெல் அறுவடை தொடக்கம்

பருவமழையின் சீரற்ற நிலை மற்றும் சித்திரை மாத மழையால், நெற்பயிர் பூஞ்சான் நோயால் பாதிக்கப்பட்டது;

Update: 2025-04-16 09:00 GMT

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன பகுதிகளில் மொத்தமாக 24,504 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 11 முதல், ஏப்ரல் 9 வரை 120 நாட்களுக்கு இரண்டாம் போகத்திற்கு நீர்விநியோகம் நடைபெற்றது.

இந்த பகுதியில் GO-51, LLR, DPS-5, ATD-38, ASD-16 போன்ற ரகங்களில் நெல் நடவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஆனால் பருவமழையின் சீரற்ற நிலை மற்றும் சித்திரை மாத மழையால், நெற்பயிர் பூஞ்சான் நோயால் பாதிக்கப்பட்டது. இதனால், வழக்கமாக ஒரு ஏக்கருக்கு மூன்று டன் மகசூல் கிடைப்பது போல் இல்லாமல், தற்போது சுமார் இரண்டரை டன் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News