ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரையால், விஷ பாம்புகள் வலம் - பாம்பு பார்த்து பதறிய மக்கள்!
ஆகாயத்தாமரையின் அடர்த்தியால் விஷ ஜந்துக்கள், பாம்புகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் அதிகமாக இப்பகுதியில் நடமாடுகின்றன.;
பவானி ஆற்றில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு – பொதுமக்களுக்கு தீவிர அச்சம் :
சத்தியமங்கலம்: வரசித்தி விநாயகர் கோவிலை ஒட்டியுள்ள பவானி ஆற்றுப் பகுதியில், ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் கொடிகள் அடர்த்தியாக பரவி ஆற்றை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளன. இத்தகைய பசுமைச் செடிகள் வெளிப்படையாக அழகாகத் தெரிந்தாலும், உள்ளார்ந்த ஆபத்துகளை உண்டாக்குகின்றன.
படித்துறை அருகே தினமும் குளிக்கவும், துணி துவைக்கவும் பொதுமக்கள் வருகின்றனர். ஆனால் தற்போது ஆகாயத்தாமரையின் அடர்த்தியால் விஷ ஜந்துக்கள், பாம்புகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் அதிகமாக இப்பகுதியில் நடமாடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், அருகிலுள்ள சாக்கடை கழிவுநீர் பவானி ஆற்றுடன் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இயற்கை நீர்வளமாக விளங்க வேண்டிய பவானி, தற்போது கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:
"ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இல்லை என்றால், நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கும்."