ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது-கொலை வழக்கில் போலீசார் சிக்கிய கதை!

ஈரோட்டில் இரட்டை கொலையால் போலீசாருக்கு இரட்டை சுமை ஏற்பட்டுள்ளது;

Update: 2025-05-12 08:40 GMT

இரட்டை கொலையால் மாவட்டம் முழுக்க போலீசாருக்கு பணிச்சுமை! – ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது :

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடந்த தம்பதி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 36 காவல் நிலையங்களில் இருந்தும் போலீசாரை ஒருங்கிணைத்து விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான ஸ்டேஷன்களில் தற்போது நான்கு அல்லது ஐந்து போலீசர்கள் மட்டுமே பணியாற்றும் நிலை உள்ளது.

பொது மக்கள் மனுக்களுக்கான விசாரணை, சட்டம் ஒழுங்கு, அடிதடி பிரச்னைகள் என தினமும் பன்முகப் பணியில் சிக்கிக்கொண்டு, சாப்பாட்டுக்கே நேரமின்றி தவிக்கும் போலீசார் – “ஓய்வு என்பது கனவு மாதிரி” என மன உளைச்சலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News