ஓமலூரில், பஸ் நிறுத்தத்தை முழுக்க கவர்ந்த காய்கறி சந்தை
₹ 65 லட்சம் புதிய காய்கறி சந்தை திறக்கப்பட்டும், வியாபாரிகள் பழைய இடமே பிடித்ததால் பயணிகள் அவதி;
பஸ் நிறுத்தத்தை முழுக்க கவர்ந்த காய்கறி சந்தை! ஓமலூரில்ஓமலூர் பஸ்நிலையத்தில் மீண்டும் காய்கறி வியாபாரம் – போக்குவரத்து சிக்கல்
ஓமலூர் பஸ்நிலைய வளாகத்தில் மீண்டும் தினசரி காய்கறி சந்தை செயல்படத் தொடங்கியுள்ளது. இதனால் பஸ்கள் இயங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
முன்பு பஸ்நிலையத்தில் பஸ்கள் நிற்கும் பகுதிகளில் காய்கறி வியாபாரம் நடைபெற்று வந்தது. இதை தவிர்க்க, ரூ.65 லட்சம் செலவில் மேற்படையுடன் கூடிய புதிய காய்கறி சந்தை வளாகம் கட்டப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு கடந்த 2-ஆம் தேதி கடை இடம் ஒதுக்கப்பட்டது. ஓமலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் இதன் மூலம் காய்கறி விற்பனையை முறையாகத் துவக்கி வைத்தது.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக வியாபாரிகள் புதிய வளாகத்தில் கடைகளை அமைக்காமல், மீண்டும் பழைய பஸ்நிலைய இடத்திலேயே வியாபாரம் செய்து வருவதால், பஸ்கள் செல்லும் வழிகளில் தடைகள் உருவாகி, போக்குவரத்து சிக்கல்கள் உருவாகியுள்ளன.
இதையடுத்து, ஓமலூர் அரசு போக்குவரத்து நிர்வாகம், இந்தப் பிரச்சனையை ஓமலூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளது. வியாபாரிகள் ஒதுக்கப்பட்ட புதிய சந்தையில் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஓமலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் நளாயினி கூறியதாவது, "பிரச்சனையை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.
இந்த நிலைமை நீடிக்கும்போது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.