மருமகள் நந்தினி 5 மாதமாக காணாமல் போன வழக்கு குறித்து புதிய புகார்

5 மதத்திற்கு முன்னர் காணாமல் போன மருமகளை போலீசில் புகார், தீவிர அவிசாரணைக்கு இந்த வழக்கு பதிவு;

Update: 2025-04-29 07:20 GMT

ஓமலூர் மருமகள் நந்தினி 5 மாதமாக காணாமல் போன வழக்கு குறித்து புதிய புகார்ஓமலுார் அருகே செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (27), கோவையில் தனியார் பார்சல் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி நந்தினி (24) மற்றும் நான்கு வயது பெண் குழந்தையுடன் கூடிய குடும்பமாக வாழ்ந்து வந்தார். கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, வீட்டில் இருந்த நந்தினி ஒரேநாளில் மாயமாகி விட்டார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பெரும் கவலையில் இருந்த அவர்கள், இறுதியாக நந்தினியின் மாமியார் வளர்மதி நேற்று ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனை அணுகி, தனது மருமகளை காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த புகார், நந்தினி காணாமல் போன ஐந்து மாதங்களுக்கு பின் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது போலீசார் இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News