சூறாவளி காற்றில் பாக்கு மரங்கள் சேதம்
சூறாவளி காற்றில் பாக்கு மரங்கள் சேதம், விடிய, விடிய மின்தடையால் அவதி;
சூறாவளி காற்றில் பாக்கு மரங்கள் சேதம் – மின்தடையால் மக்கள் அவதி
சேந்தமங்கலம் யூனியனில் கடந்த மாலை 5 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள காரவள்ளி, புலியங்காடு, நடுக்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக காரவள்ளி அருகே நிதித்ராயன்காட்டில் ஒரு தென்னை மரம் மின் கம்பியில் விழுந்தது. பல விவசாயத் தோட்டங்களில் தென்னை மரங்கள் சாய்ந்தன.
500க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்ததும், சில இடங்களில் முறிந்து விழுந்ததும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. காளப்பநாய்க்கன்பட்டி முதல் காரவள்ளி வரை சாலையோரங்களில் மரங்கள் மின் கம்பிகளில் விழுந்ததால் மின்வினியோகம் தடைப்பட்டது. இதனால் நடுக்கோம்பை, ஊர்புரம், வெண்டாங்கி உள்ளிட்ட பல கிராமங்களில் மின்சாரம் வராமல் மக்கள் விடிய விடிய அவதியடைந்தனர்.